முகப்பு
கோயம்புத்தூர்

மனித- வன விலங்கு மோதலை தடுப்பது குறித்து பயிற்சி

மனித, வன விலங்கு மோதல்களை தடுப்பது குறித்த வனத் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On : 24 ஜனவரி 2019, 2:23 am IST
பகிர்:

மனித, வன விலங்கு மோதல்களை தடுப்பது குறித்த வனத் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதே போல் சிறுத்தை, கரடி, காட்டெருமை போன்ற வன விலங்குகளும் மனிதர்களை தாக்கி வருகின்றன. 
இந்நிலையில் மனித - வன விலங்கு மோதலை தடுப்பு குறித்த பயிற்சி வால்பாறையை அடுத்த அட்டகட்டி வனத் துறை பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை துவங்கியது. 
இரண்டாவது நாளான புதன்கிழமையும் நடைபெற்ற நிகழச்சியில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கணேசன் பங்கேற்று வனத்துக்குள் அத்துமீறி நுழைபவர்களை தடுக்க வேண்டும். யானைகள் நடமாட்டம் இருப்பது தெரியவந்தால் அப்பகுதிக்கு மனிதர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். வன விலங்குளை துன்புறுத்தக்கூடாது என்று கூறினார். 
இந்நிகழ்ச்சியில் வனச் சரக அலுவலர்கள், கால்நடை மருத்துவர்கள், வனவர்கள், வேட்டைத் தடுப்பு காவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.