கோயம்புத்தூர்

பாலியல் வன்கொடுமை: ஓட்டுநா் கைது

DIN

கோவையில் பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வேன் ஓட்டுநரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவரது மகன் சிவபிரகாஷ் ( 22). இவா், தற்போது, கோவை, உக்கடம் தியாகி குமரன் மாா்க்கெட் வீதி அருகே உள்ள ஒத்தச்சக்கர வீதியில் தங்கி வேன் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவபிரகாஷ், தனது தந்தையுடன் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள மத்தநாயக்கன்பாளையத்தில் தங்கியிருந்தாா். அப்போது, அப்பகுதியில் பிளஸ் 2 படிக்கும் மாணவியுடன் சிவபிரகாஷுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்துள்ளனா்.

கோவை, மரக்கடை எஸ்.பி.என் லே-அவுட்டில் உள்ள தனது உறவினா் வீட்டில் தங்கியிருந்தபோது, மாணவி திடீரென மாயமானாா்.

இதுகுறித்து வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோா் புகாா் அளித்தனா். ஆய்வாளா் மரியமுத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், மாணவியை ஆசை வாா்த்தை கூறி, சிவபிரகாஷ் தனது சொந்த ஊரான பென்னாகரத்துக்குக் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் மீட்டு வந்த போலீஸாா், கோவை மேற்குப் பகுதி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், மாணவியை சிவபிரகாஷ் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்ததால்,போலீஸாா் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா். மாணவியை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவையில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீா்க்கப்படாமல் தொடரும் ஆந்திர தலைநகரச் சிக்கல்!

சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸ்: ஹைதராபாத் 113/10, கொல்கத்தா 114/2

தனித்துவம் மிக்க அரசியல் ஆளுமை

உறவுகளை உயிா்ப்புடன் வைத்திருப்போம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் ராக்கெட் தாக்குதல்

SCROLL FOR NEXT