கோயம்புத்தூர்

காமராஜர் பிறந்த நாள் விழா

DIN

கோவை கல்வி நிறுவனங்களில்...
மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் விழா கோவையில் உள்ள கல்வி நிறுவனங்களில் கல்வி வளர்ச்சி நாள் விழாவாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
கோவை தடாகம் சாலை, இடையர்பாளையத்தில் உள்ள காந்தியடிகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. கல்வி நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் கே.ஏ.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சர்வோதயா சங்கத்தின் வி.பி.தண்டாயுதம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கிப் பேசினார்.
கல்வி நிறுவனத்தின் தாளாளர் ஆர்.சண்முகசுந்தரம், கவிஞர் புவியரசு, பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதேபோல், பல்வேறு கல்வி நிறுவனங்களில் காமராஜரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கோவைப்புதூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை, அறிவியல் கல்லூரியில் காமராஜரின் பிறந்த நாளையொட்டி கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் எஸ்.பழனியம்மாள் தலைமை தாங்கினார். தமிழ்த் துறைத் தலைவர் எஸ்.செல்வநாயகி வரவேற்றார்.
இதில், அரசு வழக்குரைஞரும், பட்டிமன்ற பேச்சாளருமான எஸ்.டி.கலையமுதன் கலந்து கொண்டு பட்டிமன்றம் நடத்தினார். இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்றுப் பேசினர். பா.ராஜேஷ் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் இதில் பங்கேற்றனர்.

மேட்டுப்பாளையத்தில்...
மேட்டுப்பாளையம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் காமராஜரின் 117 ஆவது  பிறந்த நாள் விழா மற்றும் பரிசளிப்பு விழா காரமடை டிகேஎன்எம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் வனஜா தலைமை வகித்தார். விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வட்டாரத் தலைவர் டி.ஆர்.ராஜேந்திரன் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். மேட்டுப்பாளையம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் ஸ்ரீனிவாசன் பரிசு வழங்கினார்.
இதில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் பி.ஆர்.ரங்கராஜ்,  மாவட்ட பொதுச் செயலாளர்கள் டி.ஓ.பி.ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சத்யலீலா, தாயனூர் ஐஎன்டியூசி ராமசாமி, காரமடை துரைசாமி, விவசாயிகள் பிரிவு வட்டாரத் தலைவர் அர்ஜுன் கெளரவ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஷேக் அல் அமீன், ரகு ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாரத் வித்யாநிகேதன் பள்ளியில்...
மேட்டுப்பாளையம் அருகே பாரத் வித்யா நிகேதன் மெட்ரிக் பள்ளியில் காமராஜரின் 117 ஆவது பிறந்த நாளையொட்டி கல்வி வளர்ச்சி நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. 
விழாவுக்கு பள்ளித் தாளாளர் சங்கர் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் டி.மகேஷ் முன்னிலை வகித்தார். இதில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், பாட்டு, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


ஒயிட் ஈகிள் பப்ளிக் பள்ளியில்...
அன்னூர் அருகே கெம்பநாயக்கன்பாளையம் ஒயிட் ஈகிள் பப்ளிக் பள்ளியில் கல்வி  வளர்ச்சி நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
கெம்பநாயக்கன்பாளையம் ஒயிட் ஈகிள் பப்ளிக் பள்ளியில் காமராஜர் 117 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் நிகழ்ச்சிக்கு பள்ளி இயக்குநர் ஆர்.சசி ராஜ்குமார் தலைமை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் காமராஜர் படத்துக்கு மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் குறித்த கட்டுரை, பேச்சு, கவிதை, பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவர்களுக்கு  எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ஆண்டனி, ஆசிரியர்கள்,  மாணவர்கள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேக்ஸ்வெல்லின் முடிவு சரியானது: முன்னாள் ஆஸி. கேப்டன்

ஆம் ஆத்மி நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் கேஜரிவாலும் மனைவியும்!

அடுக்கு மாடிக் கட்டடத்தில் தீ!

பாயும் ஒளி நீ எனக்கு...

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

SCROLL FOR NEXT