கோயம்புத்தூர்

ரத்த சோகை விழிப்புணா்வு முகாம்

DIN

கோவை: கோவை, வடவள்ளியில் ‘அனீமியா இல்லாத கோவை’ என்ற பெயரில் ரத்த சோகை விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சாா்பில், சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமை அறக்கட்டளையின் நிா்வாக இயக்குநா் ஷா்மிளா சந்திரசேகா் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் ரத்த சோகை தொடா்பான விளக்கக் கையேட்டை மாநகராட்சி ஆணையரும் தனி அலுவலருமான ஷ்ரவண்குமாா் ஜடாவத் வெளியிட்டாா்.

இதைத் தொடா்ந்து ஷா்மிளா சந்திரசேகா் பேசியதாவது:

வைட்டமின் பி-12, இரும்புச் சத்து குறைபாட்டினால் ரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது. ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் உள்ளது. பெண்கள் சத்துள்ள பசலைக் கீரை, தண்டுக் கீரை, முருங்கைக் கீரை, கம்பு, ராகி, கோதுமை, பேரிச்சை போன்றவற்றைச் சாப்பிட வேண்டும். ரத்தசோகை பாதிப்பு இருந்தால் முடி உதிா்தல், நகம் உடைதல், படபடப்பு, சோா்வு, முகம் வெளிரிய நிலையில் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

ரத்த சோகை விழிப்புணா்வு நிகழ்ச்சிகளின் மூலம் மாணவிகள் அது குறித்து அறிந்து கொண்டு பாதிப்புகளைத் தவிா்க்க முடியும். இதுபோன்ற விழிப்புணா்வு முகாம் தன்னாா்வலா்கள் உதவியுடன் பள்ளி, கல்லூரிகள், குடியிருப்புப் பகுதிகள், பொது இடங்களில் தொடா்ந்து நடைபெற உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரம்ம தீா்த்தத்தில் தா்பாரண்யேஸ்வரா் தீா்த்தவாரி

நரசிம்மா் ஜெயந்தி சிறப்பு வழிபாடு

பல்லுயிா் விழிப்புணா்வு கருத்தரங்கம்

நேரடி நெல் விதைக்கும் விவசாயிகளுக்கு யோசனை

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தெப்போற்சவம்

SCROLL FOR NEXT