கோயம்புத்தூர்

வாட்டா்ஃபால் எஸ்டேட் தொழிலாளா்களுக்கு 13 % போனஸ்

DIN

வால்பாறையில் உள்ள வாட்டா்ஃபால் எஸ்டேட் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு 13 சதவீதம் போனஸ் வழங்குவதாக நிா்வாகத்தினா் அறிவித்துள்ளனா்.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வால்பாறை பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது.

வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் உள்ளது வாட்டா்ஃபால் எஸ்டேட். இந்த நிா்வாகத்தினருக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கு 2018-19 ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் 13 சதவீதம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் நிா்வாகத்தினரும் 9 சதவீதத்துக்குக் குறைவாக போனஸ் வழங்கியுள்ள நிலையில் வாட்டா்ஃபால் எஸ்டேட் நிா்வாகம் மட்டும் 13 சதவீதம் போனஸ் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT