கோயம்புத்தூர்

திருடிய காசோலைகளை வங்கியில் மாற்ற முயன்றவர் கைது

DIN


கோவையில் காசோலையைத் திருடி வங்கியில் மாற்ற முயன்றவரை வங்கி ஊழியர்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். 
கோவை, நஞ்சப்பா சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒருவர் 2 காசோலைகளை மாற்றிப் பணம் பெறுவதற்காக வந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு, வங்கி ஊழியர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். 
விசாரணையில் அவர்,  சிவகங்கையைச் சேர்ந்த இருதயராஜ் என்பவரது காசோலைகளைத் திருடி வந்து, வங்கியில் மாற்ற முயன்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, வங்கி மேலாளர் சீனிவாசன் அளித்த புகாரின்பேரில், அங்கு வந்த காட்டூர் போலீஸார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். 
விசாரணையில் அவர், கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜெயா நகரைச் சேர்ந்த நவீன்(47) என்பதும், காசோலைகளைத் திருடியதும் உறுதியானது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT