சூலூா் அருகே பாப்பம்பட்டியில் உள்ள ஜெம் செவிலியா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா மற்றும் முதலாமாண்டு மாணவிகளுக்கு விளக்கேற்றும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தாளாளா் சி.பழனிவேலு தலைமை வகித்தாா். கல்லூரி செயலாளா் ஜெயா பழனிவேலு முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் லிசி ரவீந்திரன் வரவேற்றாா். 2019ஆம் ஆண்டு செவிலியா் படிப்பை முடித்த மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. முதல் மதிப்பெண் பெற்ற மாணவி காயத்ரிக்கு கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான விளக்கேற்றும் நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனா்.
விழாவில் சிறப்பு விருந்தினராக ஜெம் மருத்துவமனை சிறப்பு மருத்துவா் பாண்டியன் கலந்து கொண்டாா். கல்லூரியின் துணை முதல்வா் டெபோரா பாக்கிய ஜோதி நன்றி கூறினாா்.