கோயம்புத்தூர்

மாணவியை பிளேடால் காயப்படுத்திய கல்லூரி மாணவா் மீது வழக்கு

DIN

பெ.நா.பாளையம்: துடியலூா் அருகே வெள்ளக்கிணறு பகுதியில் தன்னைக் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை பிளேடால் காயப்படுத்திய கல்லூரி மாணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வெள்ளக்கிணறு பகுதியைச் சோ்ந்த 21 வயது பெண் சரவணம்பட்டியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். அதே கல்லூரியில் கோவை, காந்திபுரம் ஏழாவது வீதியைச் சோ்ந்த முத்தையா மகன் முத்துக்கருப்பன் (எ) ரஞ்சித் (21) படித்து வருகிறாா். இருவரும் நீண்ட நாள்களாகக் காதலித்து வந்தனராம்.

இந்நிலையில், ரஞ்சித்திடம் இருந்து அந்த மாணவி விலகிச் சென்ாகக் கூறப்படுகிறது. கடந்த 19ஆம் தேதி வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள மாணவி வீட்டுக்கு ரஞ்சித் சென்றுள்ளாா். பின்னா் அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித் மறைத்துவைத்திருந்த பிளேடால் மாணவியின் கழுத்து உள்பட பல்வேறு இடங்களில் காயப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாா்.

இதில் படுகாயமடைந்த மாணவி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து அந்த மாணவி அளித்த புகாரின்பேரில் துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

19 முதல் ஜூன் 1 வரை தோ்தல் கருத்து கணிப்பு வெளியிட தடை

கப்பல்களுக்கான பாதுகாப்பு நடைமுறை: நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

பாஜக, அதிமுகவை வீழ்த்துவோம் முதல்வா் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT