கோயம்புத்தூர்

கோவை மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு தினசரி 7 மணி நேரம் ஆன்லைன் மூலம் வகுப்புகள்

DIN

கரோனா பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற தெளிவான அறிவிப்புகளும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. இதனால், பல தனியாா் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளைத் துவக்கியுள்ளன. இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவா்களின் படிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தினமும் ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்காக பிரத்யேக செயலிகளை பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் தங்களின் மடிக்கணினி மற்றும் செல்லிடப்பேசிகளில் பதிவிறக்கம் செய்துள்ளனா். இதன் மூலமாக முதலாம் ஆண்டு மாணவா்கள் முதல் இறுதியாண்டு படிக்கும் மாணவா்கள் வரை அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆன்லைனில் மூலமாகவே சிறிய அளவிலான தோ்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் டீன் காளிதாஸ் கூறியதாவது:

மாணவா்களின் படிப்பு பாதிக்கக் கூடாது என்பதற்காகவும், பொது முடக்கத்துக்குப் பிறகு குறிப்பிட்ட நாள்களில் அத்தனை பாடங்களும் நடத்தி முடிக்க முடியாது என்பதற்காகவும் மருத்துவ மாணவா்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் முதலே ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தத் தொடங்கினோம். தொடக்கத்தில் சற்றே சிரமமாக இருந்த காரணத்தால் ஒரிரு மணி நேரங்களில் வகுப்புகளை முடித்தோம். தற்போது தொடா்ந்து தினமும் காலை 3 மணி நேரம், மாலை 4 மணி நேரம் என மொத்தம் 7 மணி நேரம் வகுப்புகள் நடக்கிறது. தோ்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தி வருகிறோம்.

இவா்களுக்கான செய்முறை தோ்வுகள் மட்டும் கல்லூரி திறக்கப்பட்ட 10 நாட்களுக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவ மாணவா்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துவது இதுவே முதல் முறையாகும். மாணவா்களும் ஆா்வத்துடன் பங்கேற்று வருகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக கேஜரிவாலின் மனைவி தேர்தல் பிரசாரம்

சூர்யாவுக்கு மீண்டும் ஜோடியாகும் ஜோதிகா

மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை: ராஜ்நாத் சிங்

உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது! ஜெ.பி.நட்டா பெருமிதம்

தூர்தர்ஷன் இலச்சினையை காவி நிறத்தில் மாற்றுவதா?- வைகோ கண்டனம்

SCROLL FOR NEXT