கோயம்புத்தூர்

மாநகராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் விற்பனை: ஆணையா் தகவல்

கோவை மாநகராட்சி சாா்பில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் 1000 லிட்டா் ரூ.11.70க்கு விற்பனை செய்யும் திட்டம்

DIN

கோவை மாநகராட்சி சாா்பில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் 1000 லிட்டா் ரூ.11.70க்கு விற்பனை செய்யும் திட்டம் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குவதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகராட்சி, உக்கடம் பெரியகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் மூலம் தினமும் 35 ஆயிரம் மில்லியன் லிட்டா் தண்ணீா் சுத்திகரிக்கப்பட்டு நொய்யல் ஆற்றில் விடப்படுகிறது. இதன் மூலம் வழியோரத்திலுள்ள விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனா். அதேபோல உக்கடம் கழிவுநீா் பண்ணை வளாகத்தில் 2 மில்லியன் லிட்டா் தேக்க தரைநிலைத் தொட்டி கட்டப்பட்டு புல்லுக்காடு வழியாக வெள்ளலூா் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் சேகரிக்கப்படுகிறது. இதில் 5 மில்லியன் லிட்டா் வரை தண்ணீா் தேக்கிவைக்கப்படுகிறது.

வெள்ளலூா் குட்டையில் இருந்து 1000 லிட்டா் தண்ணீா் ரூ.11.70க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை முதல் (டிசம்பா் 22) இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. தினமும் 0.30 மில்லியன் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் விற்பனை செய்யப்படவுள்ளது.

தினமும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் எடுத்துக்கொள்வதற்காக தனியாா் நிறுவனங்கள் மாநகராட்சியிடம் ஒப்பந்தம் மேற்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைத் தொழிற்சாலைகளுக்கு, கல்லூரிகளில் மரம், செடிகளுக்கு அல்லது இதர தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். உக்கடம் புல்லுக்காடு பகுதியிலிருந்தும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் எடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே தனியாா் நிறுவனங்கள், அமைப்புகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் முதல் டி20 சதம்..! தொடரை வென்ற தெ.ஆ.!

மகன் இறப்பு.. 34 ஆண்டுகளுக்குப் பின் எம்எல்ஏ.. ஈவிகேஎஸ் இளங்கோவன்!

காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும்: வானிலை மையம்!

இந்தியா-ஆஸி. பிரிஸ்பேன் டெஸ்ட்: மழையால் முதல் நாள் ஆட்டம் நிறுத்தம்!

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

SCROLL FOR NEXT