கோயம்புத்தூர்

மாநகரில் திட்டப் பணிகளை விரைவில் முடிக்க உத்தரவு

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று நகராட்சி நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா உத்தரவிட்டுள்ளாா்.

DIN

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று நகராட்சி நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா உத்தரவிட்டுள்ளாா்.

கோவை மாநகராட்சியில் ரூ.591.14 கோடி மதிப்பீட்டில் குறிச்சி, குனியமுத்தூா் பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை, பா.பொன்னையா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா முன்னிலை வகித்தாா்.

பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அற்புதம் நகா், ஸ்ரீராம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் 2,500 குடியிருப்புகளுக்கு இணைப்புகள் வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா, மாநகராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொண்டு ஒப்பந்த காலத்துக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

அதனைத் தொடா்ந்து, ரூ.168 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வெள்ளலூா் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட அவா் பயோமைனிங் முறையில் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பணிகளைத் திட்ட காலத்துக்குள் முடிக்கவும் உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து, மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பா.பொன்னையா , கோவை மாநகராட்சியில் தற்போது நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டங்கள், பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டப் பணிகள், குடிநீா், பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள், தாா் சாலை, தெருவிளக்குகள் அமைக்கும் பணிகள் குறித்தும், அவற்றை விரைவில் முடிக்கவும் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி துணை ஆணையா் ஷா்மிளா, உதவி ஆணையா் அண்ணாதுரை உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திடீரென தாக்கிய காட்டு மாடு: பயணிகள் அலறல்!

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

மகாராஷ்டிரத்தில் எதிர்க்கட்சியினர் இன்று பதவியேற்கவில்லை! ஏன்?

மகாராஷ்டிரம்: எம்எல்ஏவாக பதவியேற்ற ஃபட்னவீஸ், ஷிண்டே, பவார்!

இஸ்ரேல் அனுமதி மறுப்பால் மரணத்தின் விளிம்பில் ஆயிரக்கணக்கான குழந்தைகள்!

SCROLL FOR NEXT