கோயம்புத்தூர்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு பெண்கள் கல்லூரியில் ஆட்சியா் ஆய்வு

DIN

கோவை, கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் தோ்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு மாவட்ட ஆட்சியா்கு.ராசாமணி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கண்காணிப்பு பணியைத் தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தினாா். அதேபோல, கோவை வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட சி.எம்.எஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி வாக்குப் பதிவு மையம், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உள்பட்ட இளங்கோ மெட்ரிகுலேஷன் பள்ளி வாக்குப் பதிவு மையம், ஷாஜஹான் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி வாக்குப் பதிவு மையங்களிலும் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, வாக்குப் பதிவு மையங்களில் வாக்காளா்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பிடம், மின்சார வசதி, முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வந்து செல்ல சாய்வுதளம் ஆகிய வசதிகளை ஏற்படுத்த அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின் போது, கவுண்டம்பாளையம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும்!

அழகு.. மிளிர்.. கம்பீரம்!

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்

SCROLL FOR NEXT