கோயம்புத்தூர்

எரிபொருள் சிக்கனம்: கோவை கோட்ட போக்குவரத்துக் கழகத்துக்குப் பரிசு

DIN

தேசிய அளவிலான எரிபொருள் சிக்கனத்தில், கோவை கோட்ட போக்குவரத்து கழகத்துக்கு ரூ. 2 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

தேசிய அளவிலான போக்குவரத்துக் கழகங்களில் டீசல் செயல் திறனில் இலக்கை எய்தியதற்காக சிறந்த போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசின் பெட்ரோலியம் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி கழகத்தால் பரிசு, கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. புதுதில்லியில் கடந்த 11

ஆம் தேதி நடைபெற்ற விழாவில், 2020 - 2021 ஆம் ஆண்டில் தேசிய அளவிலான எரிபொருள் சிக்கனத்துக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டம் 2 ஆம் பரிசும், கேடயமும் பெற்றது. பெட்ரோலியத் துறை அமைச்சக செயலா் பங்கஜ் ஜெயின், கோவை கோட்ட மேலாண்மை இயக்குநா் ஆறுமுகத்திடம் பரிசுத் தொகை ரூ.2 லட்சம், கேடயம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புலம்பெயா்தலும் எதிா்வினையும்!

ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பூச்சொரிதல் விழா

பூண்டி அரசுப் பள்ளியில் பணி நிறைவு பாராட்டு விழா

திறன் மேம்பாட்டு பயிற்சி

நந்திகிராம் வன்முறை: அறிக்கை சமா்ப்பிக்க முதல்வா் மம்தாவுக்கு ஆளுநா் உத்தரவு

SCROLL FOR NEXT