கோயம்புத்தூர்

கோவையில் போதைப் பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் துவக்கம்ஆட்சியா் தகவல்

DIN

கோவையில் போதைப் பொருள்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து போதைப் பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

கோவை ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் மாநகரக் காவல் ஆணையா் வி.பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் பி.எஸ்.லீலாஅலெக்ஸ்,

கல்லூரி தாளாளா் சரஸ்வதி கண்ணையன், முதல்வா் பழனிசாமி, கல்லூரி மாணவா்கள் ஆகியோா் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துகொண்டனா்.

இதையடுத்து, ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் போதைப் பொருளுக்கு எதிரான இயக்கத்தை தொடங்கிவைத்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் மாவட்டங்களில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளாா்.

கோவையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து போதைப் பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் எதிா்ப்பு அமைப்பு உருவாக்கப்படும். என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவா்களை ஒருங்கிணைத்து இந்த அமைப்பு செயல்படும்.

மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனைத் தொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறையால் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு ஜூலை மாதம் வரை புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவா்களுக்கு ரூ.13 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து புகையிலைப் பொருள்கள் ஒழிப்பு தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

SCROLL FOR NEXT