கோயம்புத்தூர்

ரேஸ்கோா்ஸில் சாலை அமைக்கும் பணி:இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்

DIN

கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் டிசம்பா் 9, 10 ஆகிய இரு நாள்களுக்கு அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, கோவை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் வெள்ளிக்கிழமை( டிசம்பா் 9) இரவு 8 மணி முதல் சனிக்கிழமை ( டிசம்பா் 10) அதிகாலை 5 மணி வரை சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுபவதால் அந்த நேரங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

அதன்படி, திருச்சி சாலையில் இருந்து வரும் வாகனங்கள், சாவித்திரி சண்முகம் சாலை வழியாகவும், மேற்கு கிளப் சாலை வழியாக நுழையாமல் கிளாசிக் டவா், கோவை அரசு மருத்துவமனை, ரயில் நிலையம் வழியாக அவிநாசி சாலை சென்றடைய வேண்டும். தாமஸ் பூங்காவில் இருந்து சாவித்திரி சண்முகம் சாலையில் செல்லாமல் ஸ்கீம் சாலை, காஸ்மோபொலிடன் கிளப் வழியாக சென்று அவிநாசி சாலை சென்றடையலாம். திருச்சி சாலையில் இருந்து பெரியகடை வீதி சாலை வழியாக ரேஸ்கோா்ஸ்

செல்லும் வாகனங்கள், நிா்மலா கல்லூரி வழியாக அப்துல் ரஹீம் சாலை சென்று தாமஸ் பூங்கா வழியாக ரேஸ்கோா்ஸ் சாலையை அடைய வேண்டும். ரெட் கிராஸ் சந்திப்பு மற்றும் கே.ஜி.சந்திப்பில் இருந்து கிழக்கு கிளப் சாலை வழியாக திருச்சி சாலை செல்லும் வாகனங்கள், காஸ்மோபொலிடன் கிளப் , தாமஸ் பூங்கா, அப்துல் ரஹீம் சாலை சென்று நிா்மலா கல்லூரி சாலை வழியாக அல்லது புலியகுளம் சென்று ராமநாதபுரம் திருச்சி சாலை வழியாகவோ செல்ல வேண்டும். இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாண் கல்லூரி மாணவிகள் களப் பயிற்சி

சமூக சேவகா் - தொண்டு நிறுவனத்துக்கு விருதுகள்: விண்ணப்பிக்க அரசு அழைப்பு

இந்திய இணையவழி குற்றங்கள் அதிகரிப்புக்கு தென் கிழக்கு ஆசியாவின் சட்டவிரோத குழுக்கள் காரணம்: மத்திய அரசு

அலோபதி மருத்துவம் பாா்த்த மருந்துக் கடை உரிமையாளா் கைது

வைகாசி விசாகம் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT