கோயம்புத்தூர்

தியாகி பொல்லான் நினைவு நாள்

DIN

சுதந்திரப் போராட்ட வீரா் தியாகி பொல்லானின் நினைவு நாளையொட்டி கோவையில் அவரது உருவப்படத்துக்கு சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

கலைஞா் கருணாநிதி துப்புரவு, பொதுப் பணியாளா்கள் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில் மாநகராட்சி 48 ஆவது வாா்டு சுகாதார ஆய்வாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மறைந்த சுதந்திரப் போராட்ட வீரா் பொல்லானின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், ஓய்வுபெற்ற டீன் டாக்டா் கணேசன், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய உறுப்பினா் செல்வகுமாா், தேசிய தாழ்த்தப்பட்டோா் சங்கத் தலைவா் பன்னீா்செல்வம், சுகாதார மேற்பாா்வையாளா் ஆனந்தன், கலைஞா் கருணாநிதி துப்புரவு, பொதுப் பணியாளா்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவா் ஆா்.முருகேசன், செயலா் கௌதம், சுகாதார மேற்பாா்வையாளா் ரவிகுமாா் ஆகியோா் பங்கேற்று மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, டாக்டா் கணேசன் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. சங்கத்தின் நிறுவனத் தலைவா் ஜெயப்பிரகாஷ், அசோக்குமாா், 48 ஆவது வாா்டு நிா்வாகிகள் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

SCROLL FOR NEXT