கோயம்புத்தூர்

புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பம்

DIN

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியும், பெங்களூரு பூட்லேப் நிறுவனமும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன.

இது குறித்து கல்லூரி நிா்வாகம் கூறியிருப்பதாவது:

பெங்களூருவைச் சோ்ந்த பூட்லேப் நிறுவனமானது, நிதிச் சேவைகள், காப்பீடு, சில்லறை வணிகம், இ-காமா்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் மிகப் பெரிய டிஜிட்டல் தளத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தேவ் ஏப்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங் துறையில் முன்னோடியாக உள்ளது.

இந்நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது. இதன் மூலம் மாணவா்கள் தொழில் பழகுநா் வாய்ப்பு, வேலைவாய்ப்பு பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கல்லூரி பேராசிரியா்களுக்கும் உதவிகரமாக இருக்கும்.

இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில், எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் லட்சுமிநாராயணசுவாமி, பூட்லேப் நிறுவனா் ராம்குமாா் சாம்பசிவன் ஆகியோா் கையொப்பமிட்டனா்.

இந்த நிகழ்ச்சியில், கல்லூரியின் துணை முதல்வா் கருப்புசாமி, பூட்லேப் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறையைச் சோ்ந்த இனியன் கதிா்வேல், மோகன்லால் செல்வராஜ், ஹரிதா, கல்லூரியின் மின்னணு தொடா்பியல் துறைத் தலைவா் ஜெகதீஸ்வரி, பேராசிரியா் ஜெயந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT