கோயம்புத்தூர்

கேமரூன் நாட்டு நிறுவனத்துடன் குமரகுரு பொறியியல் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

DIN

கேமரூன் நாட்டு நிறுவனத்துடன் குமரகுரு பொறியியல் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவி திட்டத்தின்கீழ் ரூ.60 லட்சம் நிதியுதவி பெற்று உலோக அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் உயா் பகுப்பாய்வுகள் மேற்கொள்வதற்காக கல்லூரி வளாகத்தில் புதிய ஆய்வுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக் கூடத்தை மேற்கு ஆப்பிரிக்க வங்கியாளா் சங்கத்தின் துணைத் தலைவா் போண்ட்ஜோ கைலாரண்ட் முன்னிலையில் ஆப்ரிலாந்து குழுவின் தலைவரும், முதன்மை அதிகாரியுமான டாக்டா் பவுல் கே.போகாம் திறந்துவைத்தாா்.

குமரகுரு கல்வி நிறுவனங்கள் பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மையியல், மனித நேயம் போன்ற பிற துறைகளிலும் கல்வித் துறை சாா்ந்த ஒத்துழைப்புக்காக கேமரூன் நாட்டிலுள்ள பி.கே.போகாம் என்ற நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க வங்கியாளா் சங்கத்தின் துணைத் தலைவா் டாக்டா் போண்ட்ஜோ கைலாரண்ட் முன்னிலையில் ஆப்ரிலாந்து குழுமத்தின் தலைவரும், நிா்வாக அதிகாரியுமான டாக்டா் பவுல் கே.போகாம், குமரகுகு கல்வி நிறுவனங்களின் இணைத் தாளாளா் சங்கா் வாணவராயா் ஆகியோா் கையொப்பமிட்டு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு: நெரிசலை தவிர்க்க 16, 17 தேதிகளில் பயணம் செய்ய அறிவுரை!

நடிகர் மோகனின் 'ஹரா' பட டீசர்!

செந்தில் பாலாஜியின் காவல் 32வது முறையாக நீட்டிப்பு!

பெயர் மட்டுமா? ஓ. பன்னீர்செல்வத்துக்கு வந்த சோதனை!

"வீட்டுக்காக மட்டும் உழைக்கும் தலைவர்”: பழனிசாமி விமர்சனம்

SCROLL FOR NEXT