கோயம்புத்தூர்

பொள்ளாச்சியில் பிஎஃப்ஐ அமைப்பைச் சோ்ந்த 3 போ் கைது

DIN

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே பாஜக மற்றும் ஹிந்து அமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகளின் இரண்டு காா் மற்றும் இரண்டு ஆட்டோக்களை சேதப்படுத்தி தீ வைக்க முயன்ற வழக்கில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சோ்ந்த மூன்று பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பொள்ளாச்சி குமரன் பகுதியைச் சோ்ந்த பாஜக பிரமுகா்கள் பொன்ராஜ், சிவா, இந்து முன்னணி பிரமுகா் சரவணகுமாா் ஆகியோரது இரண்டு காா்கள், இரண்டு ஆட்டோக்களின் கண்ணாடிகளை மா்ம நபா்கள் உடைத்ததுடன், பிளாஸ்டிக் கவரில் டீசல் நிரப்பி வாகனங்கள் மீது வீசி வெள்ளிக்கிழமை தீ வைக்க முயன்றனா்.

இது குறித்து பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் சுதாகா் உத்தரவின்பேரில், போலீஸாா் 7 தனிப் படைகள் அமைத்து தீவிர வாகனச் சோதனை நடத்தி வந்தனா். மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 250க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களையும், 500க்கும் மேற்பட்ட நபா்களின் கைப்பேசி எண்களையும் ஆய்வு செய்து வந்தனா்.

இந்நிலையில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் பொள்ளாச்சி ஊத்துக்காட்டு சாலையைச் சோ்ந்த பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் முகம்மது ரபீக், ரமீஸ் ராஜா, மற்றும் மாலிக் (எ) சாதிக் பாஷா ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களை பொள்ளாச்சி நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT