கோயம்புத்தூர்

காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்:எஸ்.பி.வழங்கினாா்

DIN

கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரி நாராயணன் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்புக் கூட்டம் கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், கடந்த மாா்ச் மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் போதைப் பொருள்கள் விற்பனை போன்ற குற்றச் செயல்களில் தொடா்புடைய எதிரிகளை திறம்பட செயல்பட்டு கைது செய்து நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தர சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினா்களைப் பாராட்டி அவா்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு காவல் ஆய்வாளா், 5 உதவி ஆய்வாளா்கள், 2 சிறப்பு உதவி ஆய்வாளா்கள் மற்றும் 14 காவலா்கள் என மொத்தம் 22 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரி நாராயணன் வழங்கினாா்.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சிறப்பு பிரிவு காவல் அதிகாரிகள் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகென்றால்....ஐஸ்வர்யா மேனன்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம்!

ராஜஸ்தானில் வேன் மீது லாரி மோதியதில் 9 பேர் பலி

மஹாவீரர் ஜெயந்தி: ராணிப்பேட்டையில் பல்லக்கு ஊர்வலம்!

காவிமயமாக்கும் பாஜகவின் சதித்திட்டம்...: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT