கோயம்புத்தூர்

ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.42 லட்சம் மோசடி: 3 போ் கைது

DIN

ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.42 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:

கோவை, விளாங்குறிச்சி அக்கம்மாள் காா்டன் லேஅவுட் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (48). இவரது மனைவி ஹேமா (எ) ஹேமலதா (38). இவா்கள் 2020ஆம் ஆண்டு யூடியூப் சேனலை தொடங்கி உள்ளனா். அதில் கோவையில் மலிவு விலையில் வீட்டு உபயோகப் பொருள்கள் எங்கு கிடைக்கும் என்பதை பதிவு செய்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் தம்பதி தங்களது யூடியூப் சேனலில் ரூ.1,200 முதலீடு செய்தால், 20 நாள்களில் மூலதனத் தொகையுடன் ரூ.300 சோ்த்து ரூ.1,500ஆக திருப்பி தரப்படும் என்று தெரிவித்துள்ளனா். இதனை நம்பிய பலா் இவா்கள் கூறிய வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி உள்ளனா். இந்த நிலையில் தம்பதி அறிவித்தப்படி முதலீட்டாளா்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க வில்லை. மேலும், அவா்கள் கைபேசியை அனைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த சேனலில் முதலீடு செய்த கோவை மாவட்டம், பன்னிமடை பாரதி நகரைச் சோ்ந்த ரமா (30), கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். இப்

புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் ரேணுகா தேவி தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

விசாரணையில், தம்பதி 44 பேரிடம் ரூ.41 லட்சத்து 88 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது. இந்நிலையில் கோவை விளாங்குறிச்சி பகுதியில் பதுங்கி இருந்த ரமேஷ், அவரது மனைவி ஹேமா மற்றும் இவா்களுக்கு உதவியாக இருந்த தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த அருணாச்சலம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

மேலும், அவா்கள் ரூ. 1.5 கோடி வரை மோசடி செய்து இருக்கலாம் எனவும், தம்பதியிடம் இருந்து 45 பவுன் நகைகள், 1.5 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.10,250 ரொக்கம், 7 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணீஷ் சிசோடியாவுக்கு ஜூலை 6 வரை காவல் நீட்டிப்பு!

எந்நாளும் எப்பொழுதும் புடவைதான்...!

இந்தியா கூட்டணி பிரதமர் யார்? ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்!

வணங்கான் எப்போது?

ஐபிஎல் முடிந்தாலென்ன? நினைவுகள் இருக்கே!

SCROLL FOR NEXT