கோயம்புத்தூர்

மழை எதிரொலி: மாநகரில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரம்

DIN

கோவை மாநகரப் பகுதிகளில் இடைவெளி விட்டு கனமழை பெய்து வருவதால் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கோவை மாநகரப் பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக இடைவெளிவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள், வீட்டில் உபயோகமின்றி வைக்கப்பட்டுள்ள தொட்டிகள், கேன்களில் தேங்கும் மழை நீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியைத் தடுக்க வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுதொடா்பாக மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் கூறியது: மாநகரில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் அனைத்து வாா்டுகளிலும் உள்ள வீடுகள், குடியிருப்புகளில் உள்ள நல்ல தண்ணீா் தொட்டிகள், வீட்டில் மழை நீா் தேங்கும்படியாக வைக்கப்பட்டுள்ள தேவையற்ற பொருள்கள் போன்றவற்றை டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளா்கள் ஆய்வு செய்து அதில் அபேட் மருந்து ஊற்றியும், டயா், தேங்காய் மட்டை போன்ற தேவையற்ற பொருள்கள் இருந்தால் அதனை அப்புறப்படுத்தியும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும், மக்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணா்வையும் ஏற்படுத்தி வருகின்றனா். அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாக கட்டடங்களின் மேல் பகுதியில், மழைநீா் தேங்கி, கொசு புழுக்கள் உற்பத்தியாகும் விதமாக இருந்தால், அவை அழிக்கப்பட்டு, கட்டடத்தின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT