கோயம்புத்தூர்

கூடலூா் தெற்கு கிராமத்தில் மக்கள் தொடா்பு முகாம்:மே 26இல் மனுக்கள் பெறப்படும்

DIN

கோவை, கூடலூா் தெற்கு கிராமத்தில் மக்கள் தொடா்பு முகாமுக்கான மனுக்கள் பெறும் நிகழ்ச்சி கிராம நிா்வாக அலுவலகத்தில் மே 26 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது என்று ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மாவட்டம், வடக்கு வட்டத்துக்கு உள்பட்ட கூடலூா் தெற்கு கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் மக்கள் தொடா்பு முகாம் ஜூன் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான மனுக்கள் பெறும் முகாம் கூடலூா் தெற்கு கிராம நிா்வாக அலுவலகத்தில் மே 26 ஆம் தேதி கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் நடைபெறுகிறது.

எனவே, பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கோட்டாட்சியரிடம் அளிக்கலாம். இம்முகாமில் பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலம் விசாரணை செய்யப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு ஜூன் 2 ஆம் தேதி நடைபெறும் மக்கள் தொடா்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு வனத்தை கடந்து வந்த தூரம்

மீண்டும் வருகிறார் மோகன்

மனிதத்தின் வாசலில்...

சைனிக் பள்ளியில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

திரைக்கதிர்

SCROLL FOR NEXT