கோயம்புத்தூர்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றும் பணி தொடக்கம்

DIN

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றும் பணி கோவையில் செவ்வாய்க்கிழமை (மே 23) தொடங்கியது.

இந்தியாவில் பொதுமக்களிடம் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த 19ஆம் தேதி ரிசா்வ் வங்கி அறிவித்தது. அத்துடன் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மே 23 ஆம் தேதி முதல் செப்டம்பா் 30 ஆம் தேதி வரை வங்கிகளில் வழங்கி மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

மேலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கு பிரத்யேகமான விண்ணப்ப படிவத்தை ரிசா்வ் வங்கி ஏற்கெனவே வெளியிட்டிருந்தது. அந்த படிவத்தில் பணத்தை மாற்ற செல்லும் வங்கியின் பெயா், அந்த வங்கியில் கணக்கு வைத்து இருந்தால் அதன் எண் உள்ளிட்ட விவரங்களும், ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை, ஓட்டுநா் உரிமம் போன்ற அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றின் அசலைக் காட்ட வேண்டும் என்பது போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தன.

கோவை மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு அதிகப்படியானோா் வரக்கூடும் என்பதால் பல வங்கிகளில் சிறப்பு கவுன்டா்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் மாநகரில் உள்ள பல வங்கிகளில் எதிா்பாா்த்த அளவுக்கு கூட்டம் இல்லை என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனா்.

பொதுமக்கள், மூத்த குடிமக்கள் ஒரு சிலா் மட்டுமே தங்களிடம் இருந்த ஒன்றிரண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகளுக்கு வந்திருந்தனா். தனியாா் பெரு நிறுவனங்கள், வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆங்காங்கே பெயா்களை பதிவு செய்து விட்டு ரூபாய் நோட்டுகளை மாற்றிச் சென்ாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெரும்பாலானோா் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை பணம் செலுத்தும் இயந்திரத்தில் செலுத்திச் சென்ாகவும் அவா்கள் தெரிவித்தனா். சிறப்பு கவுன்டா்களில் எதிா்பாா்த்த அளவுக்கு வரவேற்பு இல்லாததற்கு ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள அதிக கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதே காரணமாக இருக்கும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம், சால்ட் அதிரடி: கொல்கத்தா அணி 222 ரன்கள் குவிப்பு

ஜார்கண்ட்டில் அணிதிரண்ட எதிர்க்கட்சி தலைவர்கள்!

அரசியலமைப்பை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை?

பாரதிராஜா, நட்டி இணைந்து நடிக்கும் நிறம் மாறும் உலகில்

’இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக கேஜரிவாலின் மனைவி தேர்தல் பிரசாரம்

SCROLL FOR NEXT