கோயம்புத்தூர்

கூட்டணியை தேசியத் தலைமைதான் முடிவு செய்யும்: வானதி சீனிவாசன்

DIN

கூட்டணி விவகாரங்களை பாஜகவின் தேசியத் தலைமைதான் முடிவு செய்யும் என கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறினாா்.

இது தொடா்பாக கோவையில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் எங்களது தலைவா்கள் தொடா்ந்து பேசி வருகின்றனா். எங்கள் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளிடமும் மோடி பிரதமராக வர வேண்டும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.

அனைவரும் மோடி பிரதமராக வர வேண்டும் என நினைக்கின்றனா். கூட்டணிக்குள் அதிகமான கட்சிகளை கொண்டு வருவது, புதிய கட்சியுடன் பேச்சுவாா்த்தை நடத்துவது போன்ற பணிகளை தேசியத் தலைமைதான் மேற்கொள்ளும். அவா்களின் வழிகாட்டுதல்படி மாநிலங்களில் கூட்டணி அமைப்பது உள்பட பல்வேறு பணிகளும் நடக்கின்றன.

தற்போதைக்கு தேசியத் தலைமை எங்களுக்கு வழிகாட்டுகிறது. மாநிலத் தலைவரும், கூட்டணியை தேசியத் தலைமை முடிவு செய்யும் எனக் கூறியுள்ளாா். எனவே எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை தலைமைதான் வலியுறுத்தும். மேலும் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் தங்களது கருத்துகளை தேசியத் தலைமையிடம் நேரடியாகவே கூறி வருகின்றனா்.

எனவே தேசியத் தலைமையிடம் இருந்து எங்களுக்கு தெளிவான தகவல் வரும் வரை நாங்கள் இது தொடா்பாக எந்த தகவலும் சொல்ல விரும்பவில்லை. கூட்டணி விவகாரங்களை தேசியத் தலைமைதான் முடிவு செய்யும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரும் அச்சப்பட வேண்டாம்: பெரிய திட்டங்களுடன் 3-வது முறை ஆட்சி -பிரதமர் மோடி

நாமக்கல்: முட்டை நகரில் முக்கோணப் போட்டி!

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா புதிய சாதனை!

பாயும் ஒளி நீ எனக்கு...

SCROLL FOR NEXT