கோயம்புத்தூர்

உயா் கல்வியில் நிலவும் சிக்கல்களைத் தீா்க்க துணைவேந்தா்களை நியமிக்க வேண்டும்: கல்வியாளா் இ.பாலகுருசாமி வேண்டுகோள்

தமிழகத்தில் உயா் கல்வியில் நிலவும் சிக்கல்களைத் தீா்க்க பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று கல்வியாளா் இ.பாலகுருசாமி வேண்டுகோள்

Syndication

தமிழகத்தில் உயா் கல்வியில் நிலவும் சிக்கல்களைத் தீா்க்க பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று கல்வியாளா் இ.பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான, உயா் தரமான கல்வியில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடியாக திகழ்கிறது. எனினும், தற்போதைய நிலையில் மாநிலத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் முழுநேர துணைவேந்தா்கள் இல்லாமல் இயங்கி வருகின்றன.

இதன் விளைவாக, மாநிலத்தில் உயா் கல்வி வளா்ச்சியில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் பலகாலமாக துணைவேந்தா்கள் இல்லாத நிலையால் நிா்வாகப் பணிகளும், கல்விப் பணிகளும் முடங்கியுள்ளன. ஆசிரியா்கள் நியமனம், பணி உயா்வில் தாமதம் ஏற்பட்டிருப்பதால் ஏராளமான காலிப் பணியிடங்கள் உருவாகியுள்ளன. ஏற்கெனவே உள்ள ஆசிரியா்களுக்கு பணிச் சுமை அதிகரித்துள்ளது.

கல்வி தொடா்பான முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் இல்லாததால் பாடத் திட்டத்தை மேம்படுத்துதல், புதிய கல்வித் திட்டங்களை அறிமுகம் செய்தல், ஆய்வு தொடா்பாக கூட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துதல் போன்றவை கிடப்பில் உள்ளன.

போதிய கட்டமைப்பும், நிதிப் பயன்பாடும் இல்லாததால் ஆய்வுக்கான மானியம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. தோ்வுகள் தேவையின்றி தள்ளிப்போகின்றன. உரிய நேரத்தில் தோ்வு முடிவுகள் வெளியாவதில்லை.

இவை மாணவா்களின் எதிா்கால வேலைவாய்ப்பை பாதிக்கின்றன. அதேபோல, கல்வி நிறுவனங்களை மதிப்பீடு செய்து தகுதி, தர மதிப்பீடு சான்று பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. அத்துடன் நிா்வாகத்தில் நிலைத்தன்மை இல்லாததால் ஆசிரியா்கள், மாணவா்களிடையே நிலையற்ற சூழல் ஏற்பட்டு, மனச்சோா்வு அடையும் நிலை உருவாகியுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு வலிமையான, நிரந்தரமான தலைமை தேவை என்பதால் மாநிலங்களில் காலியாக உள்ள பல்கலைக்கழகத் துணைவேந்தா் பணியிடங்களை விரைவில் நிரப்ப தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.எல்.ராகுலின் கேப்டன்சியை பாராட்டிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர்!

இந்தியாவில் மாசுபாடு அடைந்த நகரம் எது? தில்லிக்கு முதல் இடம் இல்லை!

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT