கோயம்புத்தூர்

கதவடைப்பு போராட்டம்: கிரில் தயாரிப்பாளா்கள் சங்கம் அறிவிப்பு

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தமிழகம் முழுவதும் கதவடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கிரில் தயாரிப்பாளா்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தமிழகம் முழுவதும் கதவடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கிரில் தயாரிப்பாளா்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட கிரில் தயாரிப்பாளா்கள் நலச் சங்கத்தின் தலைவா் திருமலை எம்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த மக்களவைத் தோ்தலின்போது, கோவை தொகுதிக்கு திமுக சாா்பில் தனியாக தோ்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், எங்களது நீண்ட நாள் கோரிக்கையான கிரில் தொழிலுக்கு கோவையில் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஒரே சமயத்தில் கோவையில் தங்க நகை தொழில் பூங்காவும், கிரில் தொழில் பூங்காவும் அமையும் என்று தொழில் துறை அமைச்சரும் தெரிவித்திருந்தாா். ஆனால், கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டுகிறாா்.

கிரில் தொழில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளது. விசைத்தறிக் கூடங்களுக்கு வழங்குவதுபோல கிரில் தொழிற்கூடங்களுக்கு 500 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்க வேண்டும் என 15 ஆண்டுகளுக்கும்மேலாக கோரிக்கை விடுத்து வருகிறோம் . இந்தக் கோரிக்கையும் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை.

கோவை நகரில் தொழிலகங்கள் மற்றும் சிறு தொழில் கூடங்கள் உள்ள இடங்களைப் பாதுகாக்கப்பட்ட தொழில் மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். கோவைக்கு வரும் முதல்வா் கிரில் தொழில் சாா்ந்துள்ள பல லட்சம் பேரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் கிரில் தொழில் கூடங்களை மூடி கதவடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவாவில் இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: அமித் ஷா இரங்கல்

அறவழியில் செயல்பட வேண்டும்

“விருச்சிகம் ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சூர்யா 47 பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு - புகைப்படங்கள்

கண்ணாமுச்சி ஏனடா? சினேகா!

SCROLL FOR NEXT