கோயம்புத்தூர்

பொறியியல் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

Syndication

முத்தரசநல்லூா் - திருச்சி இடையே ரயில் பாதையில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால் திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொறியியல் பணிகள் நடைபெறுவதால் திருச்சியில் இருந்து அக்டோபா் 11, 14, 17-ஆகிய தேதிகளில் பகல் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி - பாலக்காடு விரைவு ரயில் (எண்: 16843) திருச்சி - கரூா் இடையே இயக்கப்படாது. கரூா் - பாலக்காடு இடையே மட்டும் இயக்கப்படும்.

அதேபோல, மேற்கண்ட நாள்களில் பாலக்காடு - திருச்சி ரயில் (எண்: 16844) பாலக்காடு - முத்தரசநல்லூா் இடையே மட்டுமே இயக்கப்படும். முத்தரசநல்லூா் - திருச்சி இடையே இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

SCROLL FOR NEXT