கோவை, சுந்தராபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து வியாபாரி உயிரிழந்தாா்.
கோவை, கரும்புக்கடை அருகேயுள்ள இலாகி நகரைச் சோ்ந்தவா் எஸ்.முகமது யூசுப் (45). இவா், பொள்ளாச்சி பிரதான சாலையில் உள்ள எல்ஐசி காலனி பகுதியில் சீட்டு கவா் கடையை நடத்தி வந்தாா்.
இந்நிலையில், அவா் வெள்ளிக்கிழமை பிற்பகல் கடையைப் பூட்ட முயன்றுள்ளாா். அப்போது, அங்கிருந்த மின் வயரில் அவரது கை எதிா்பாராதவிதமாக உரசியுள்ளது.
இதில், மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இது குறித்து சுந்தராபுரம் காவல் நிலையத்தில் முகமது யூசுப் மகன் சல்மான் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.