கோயம்புத்தூர்

குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள்

வால்பாறையில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகளால் மக்கள் அச்சமடைந்தனா்.

Syndication

வால்பாறையில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகளால் மக்கள் அச்சமடைந்தனா்.

கோவை மாவட்டம், வால்பாறையில் யானை உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குடியிருப்பு மற்றும் விளைநிலங்களில் நுழையும் வன விலங்குகள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வால்பாறை நகா் கக்கன் காலனி சிறுவா் பூங்கா பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் சனிக்கிழமை இரவு யானைகள் கூட்டம் நுழைந்தது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனா்.

சிலா் பட்டாசுகளை வெடித்தும், சப்தம் எழுப்பியும் நீண்ட நேரம் போராடி யானைகளை வனத்துக்குள் விரட்டினா். சம்பவ இடத்தில் வால்பாறை வனத் துறையினா் முகாமிட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனா்.

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

திருமணம் கைவிடப்பட்டது... அறிக்கை வெளியிட்ட ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT