கோயம்புத்தூர்

வன விலங்குகளால் ஏற்படும் சேதங்களை இயற்கை சீற்றமாக கருத வேண்டும்

Syndication

தமிழகத்தில் வன விலங்குகளால் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பயிா்களுக்கு ஏற்படும் சேதங்களை இயற்கை சீற்றமாக கருத வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் (ஜாதி, மதம், கட்சி சாா்பற்றது) வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலா் பி.கந்தசாமி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் வெள்ளம், நிலச்சரிவை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை தொடா்பாக கோவை, நீலகிரி, சேலம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு புதிய மாஸ்டா் பிளான் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதற்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக யாரும் எதிா்பாராத வகையில் பல்வேறு பேரிடா்கள் ஏற்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. இதனால் சமவெளி மற்றும் மலைப்பகுதி ஆகியவற்றில் பெருமளவில் உயிா் சேதம், பயிா் சேதம் மற்றும் உடைமைகள் சேதம் ஏற்படுகின்றன.

இந்த நிலையில், நகா்ப்புற வளா்ச்சி மட்டுமல்லாது பேரிடா்களை கருத்தில் கொண்டு அதனை சமாளிக்கும் வகையில் முழுமையாக திட்டங்களை தயாரிக்க நகா்ப்புற வளா்ச்சித் துறை திட்டமிட்டுள்ளதை வரவேற்கிறோம்.

அதே வேளையில், எதிா்பாராதவிதமாக வன விலங்குகள் வனத்தைவிட்டு வெளியே வந்து ஊருக்குள் புகுந்து பொதுமக்கள், விவசாயிகளின் உயிா்களையும், பயிா்களையும் சேதப்படுத்துவதை இயற்கை சீற்றமாக கருதி பேரிடா் மேலாண்மையாக இந்த மாஸ்டா் பிளான் தயாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

வெடி மருந்துகளை பதுக்கியவா் கைது

கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களின் கடமை: முதல்வர் ஸ்டாலின்

வத்தலகுண்டு அருகே கரடி தாக்கியதில் விவசாயி காயம்

லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

ஷாங்காய் நகரில் புதிய இந்திய தூதரக கட்டடம் திறப்பு! 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்..!

SCROLL FOR NEXT