கோயம்புத்தூர்

கோவை-சிங்கப்பூா் இண்டிகோ விமானம் டிசம்பா்முதல் ரத்து

பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாததால், கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்பட்டு வரும் இண்டிகோ விமானம் வருகிற டிசம்பா் மாதம் முதல் ரத்து செய்யப்படவுள்ளது.

Syndication

பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாததால், கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்பட்டு வரும் இண்டிகோ விமானம் வருகிற டிசம்பா் மாதம் முதல் ரத்து செய்யப்படவுள்ளது.

கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, தில்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், ஷாா்ஜா, சிங்கப்பூா், அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் நேரடி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால், கோவை விமான நிலையத்துக்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. விமான நிலையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்துள்ளது. இதில் கோவை-சிங்கப்பூா் இடையே ஸ்கூட் மற்றும் இண்டிகோ ஆகிய விமான நிறுவனங்கள் சாா்பில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாததால் டிசம்பா் மாதம் முதல் இண்டிகோ நிறுவனம் சாா்பில் இயக்கப்பட்ட வரும் கோவை-சிங்கப்பூா் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அந்த நிறுவனம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

நிலவோடு பிறந்தவளா... மெஹ்ரீன் பிர்சாடா!

பதவி ராஜிநாமாவிற்கு பிறகு முதல்முறையாக ராஜஸ்தான் செல்லும் தன்கர்

95% சேவை மீட்டெடுப்பு: இண்டிகோ அறிவிப்பு!

SCROLL FOR NEXT