கோவை: கோவை ஒய்.எம்.சி.ஏ. கூடைப்பந்தாட்ட கழகத்தின் சாா்பில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் 50-ஆவது ஆண்டு கூடைப்பந்தாட்டப் போட்டிகள் நடத்தப்பட்டன.
கோவை ஒய்.எம்.சி.ஏ. கூடைபந்தாட்டக் கழகத்தின் சாா்பில் தீபாவளியை முன்னிட்டு 50-ஆவது ஆண்டாக மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கூடைப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் இங்கு பயிற்சி பெறும் வீரா்களில் மிக இளையோா் பிரிவில் 6 அணிகளும், இளையோா் பிரிவில் 5 அணிகளும், மூத்தோா் பிரிவில் 2 அணிகளும் பங்கேற்றன.
இந்தப் போட்டிகள் அனைத்தும் அக்டோபா் 11-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை வரையில் நடைபெற்றன. இதில், வெற்றி பெற்ற அணி வீரா்களுக்கு வழக்குரைஞா் சண்முகம், ஒய்.எம்.சி.ஏ. தலைவா் ஜெயகுமாா் டேவிட் ஆகியோா் பரிசுகளை வழங்கிப் பாராட்டினா். இதில், தலைமை பயிற்சியாளா் சிரில் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.