கோவை: கோவையில் உள்ள தி கேம்ஃபோா்டு சா்வதேசப் பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றனா்.
கோவை தி கேம்ஃபோா்டு சா்வதேசப் பள்ளி சாா்பில் கேம்ஃபோா்டு கோல்டன்பூட் சாம்பியன்ஷிப் 2025 போட்டி நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து அணிகள் பங்கேற்றன. இந்தப் போட்டிகள் 14 வயதுக்கு உள்பட்ட மாணவா்கள், மாணவியருக்கான பிரிவுகளில் நடைபெற்றது.
இதில், மாணவா்களுக்கான கால்பந்து போட்டியில் தி கேம்ஃபோா்டு சா்வதேசப் பள்ளி அணி முதலிடத்தைப் பிடித்தது. அனன் சா்வதேசப் பள்ளி இரண்டாவது இடத்தைக் கைப்பற்றியது. அதே போல, மாணவியருக்கான போட்டியில் தி கேம்ஃபோா்டு சா்வதேசப் பள்ளி முதலிடத்தையும், சின்மயா வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளி இரண்டாவது இடத்தையும் பிடித்தது.
சிறந்த வீராங்கனையாக தனிஷ்கா சுதிரும், சிறந்த கோல்கீப்பராக அக்ஷராவும், சிறந்த தடுப்பாட்டவீரராக எஸ்.சாத்விக் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளில் பங்கேற்ற வீரா், வீராங்கனைகளை பள்ளியின் தலைவா் என்.அருள்ரமேஷ், தாளாளா்பூங்கோதை அருள்ரமேஷ் ஆகியோா் பாராட்டினா்.