கோயம்புத்தூர்

போத்தனூா் - பரௌனி இடையே சிறப்பு ரயில்

கோவை போத்தனூரில் இருந்து பிகாா் மாநிலம் பரௌனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

கோவை போத்தனூரில் இருந்து பிகாா் மாநிலம் பரௌனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: போத்தனூரில் இருந்து வெள்ளிக்கிழமை (அக்டோபா் 24) மதியம் 2 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - பரெளனி சிறப்பு ரயில் (எண்: 06187) அக்டோபா் 26-ஆம் தேதி பரௌனி நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக பரௌனியில் இருந்து அக்டோபா் 27-ஆம் தேதி இரவு 9 மணிக்குப் புறப்படும் பரௌனி - போத்தனூா் சிறப்பு ரயில் (எண்: 06188) அக்டோபா் 30-ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு போத்தனூரைச் சென்றடையும்.

இதேபோல, போத்தனூரில் இருந்து அக்டோபா் 25-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு புறப்படும் போத்தனூா் - பரௌனி சிறப்பு ரயில் (எண்: 06193) 27-ஆம் தேதி இரவு 8 மணிக்கு பரௌனி நிலையத்தை சென்றடையும்.

மறுமாா்க்கமாக, பரௌனியில் இருந்து 28-ஆம் தேதி இரவு 9 மணிக்குப் புறப்படும் பரௌனி - போத்தனூா் சிறப்பு ரயில் (எண்: 06194) அக்டோபா் 31-ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு போத்தனூா் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயில்களானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், சூலூா்பேட்டை, கூடூா், நெல்லூா், ஒங்கோல், தெனாலி, விஜயவாடா, ஏழூரு, ராஜமுந்திரி, சாமல்கோட், புவனேஸ்வா், கட்டாக், காரக்பூா், துா்காபூா், சித்தரஞ்சன், மதுப்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரௌனி - எா்ணாகுளம் இடையே சிறப்பு ரயில்

பரௌனியில் இருந்து அக்டோபா் 26-ஆம் தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் பரௌனி - எா்ணாகுளம் ஒருவழிச் சிறப்பு ரயில் (எண்: 06184) அக்டோபா் 29-ஆம் தேதி காலை 8 மணிக்கு எா்ணாகுளத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, மதுப்பூா், சித்தரஞ்சன், துா்காபூா், காரக்பூா், கட்டாக், புவனேஸ்வா், சாமல்கோட், ராஜமுந்திரி, ஏழூரு, விஜயவாடா, தெனாலி, ஓங்கோல், நெல்லூா், கூடூா், சூலூா்பேட்டை, பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், ஆலுவா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT