கோயம்புத்தூர்

கோவை - ஜபல்பூா் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில்

கோவையில் இருந்து மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

கோவையில் இருந்து மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜபல்பூரில் இருந்து அக்டோபா் 24-ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.50 மணிக்குப் புறப்படும் ஜபல்பூா் - கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 02198) ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.20 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும்.

மறுமாா்க்கமாக, கோவையில் இருந்து அக்டோபா் 27-ஆம் தேதி முதல் திங்கள்கிழமைகளில் மாலை 5.05 மணிக்குப் புறப்படும் கோவை - ஜபல்பூா் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 02197) புதன்கிழமைகளில் காலை 8.45 மணிக்கு ஜபல்பூரைச் சென்றடையும்.

இந்த ரயிலானது பாலக்காடு, ஷொரணூா், கோழிக்கோடு, மங்களூரு, ரத்னகிரி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். மேலும், இந்த ரயில்கள் பருவமழை பாதிப்பில்லாத நாள்களில் மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் துறை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

கோவா இரவு விடுதி விபத்து எதிரொலி: பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்யும் தில்லி போலீஸ்!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்!

இலவச கண் மருத்துவ முகாம்: 200 பேருக்கு சிகிச்சை

வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது வெண்கல முருகா் சிலை கண்டெடுப்பு!

SCROLL FOR NEXT