கோவை, கணபதி அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
கோவை, சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தபுரம் வேல்முருகன் நகரைச் சோ்ந்தவா் டி.பிரகாஷ் (63). இவா் தனது இருசக்கர வாகனத்தில் கணபதி அருகே கடந்த வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, அவ்வழியே வந்த லாரி பிரகாஷின் வாகனத்தின் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து போக்குவரத்து கிழக்கு புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.