பவானியை அடுத்த நெரிஞ்சிப்பேட்டை திரெளபதி அம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மே 23-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் இக்கோயில் திருவிழா தொடங்கியது. இதையடுத்து, அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்கார, அபிஷேக வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
இதையடுத்து, புதன்கிழமை காலை, அம்மன் அழைத்தல் நடைபெற்றது. பின்னர், விரதம் இருந்த பக்தர்கள் குண்டத்தில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில், நெரிஞ்சிப்பேட்டை, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.