ஈரோடு

ஈரோடை அமைப்பு சார்பில் ரூ. 10 லட்சம் செலவில் கீழ்பவானி வாய்க்காலைத் தூர்வாரும் பணி தொடக்கம்

ஈரோடை அமைப்பு சார்பில் ரூ. 10 லட்சம் செலவில் கீழ்பவானி பிரதான வாய்க்காலைத் தூர்வாரும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

DIN

ஈரோடை அமைப்பு சார்பில் ரூ. 10 லட்சம் செலவில் கீழ்பவானி பிரதான வாய்க்காலைத் தூர்வாரும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
 பவானிசாகர் அணையின் பிரதான வாய்க்காலான கீழ்பவானி வாய்க்கால் 200 கி.மீ. நீளம் கொண்டது. இதன் மூலமாக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
 இந்த வாய்க்கால் வெட்டப்பட்டு கடந்த 61 ஆண்டுகள் ஆகியும் ஒருமுறை கூட தூர்வாரப்படவில்லை. இதனால் அதில் பல இடங்களில் வண்டல் மண்ணும், மண் கப்பிகளும் சுமார் ஒரு மீட்டர் முதல் 2 மீட்டர் உயரம் வரை படிந்துள்ளன.
 இதனால், வாய்க்காலின் கடைகோடி விவசாயிகளுக்கு குறிப்பிட்ட நாள்களுக்குள் தண்ணீர் சென்று சேர்வதில்லை. இப்பிரச்னையைத் தீர்க்கும் வகையில் ஈரோடை அமைப்பு, பொதுப்பணித் துறை மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கீழ்பவானி வாய்க்காலைத் தூர்வார முடிவு செய்யப்பட்டது.
 இதையடுத்து, வாய்க்காலைத் தூர்வாரும் பணிக்கான தொடக்க விழா ஈரோடு அருகே உள்ள அறச்சலூரில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடை அமைப்பின் நிறுவனர் மருத்துவர் கே.சுதாகர் தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பெரியசாமி, கீழ்பவானி முறைநீர்ப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் காசியண்ணன், மருத்துவர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 பி.வி.பி. பள்ளித் தாளாளர் எல்.எம்.ராமகிருஷ்ணன் பணியைத் தொடக்கிவைத்தார். பொதுப்பணித் துறை நிர்வாகப் பொறியாளர் குழந்தைசாமி, உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், வடுகபட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் செங்கோட்டுவேலப்பன், அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தலைவர் கணபதி, பேரூராட்சி செயல் அலுவலர் சௌந்தரராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சக்தி அம்மா ஜெயந்தி விழா: தேசிய கராத்தே போட்டி

விவசாயி வீட்டில் 4.5 பவுன் திருட்டு

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் கண்கானிப்பு கேமரா

காட்பாடியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கஞ்சா விற்பனை: வட மாநில இளைஞா் கைது

SCROLL FOR NEXT