ஈரோடு

நஞ்சை ஊத்துக்குளி ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மொடக்குறிச்சியை அடுத்த நஞ்சை ஊத்துக்குளி ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

மொடக்குறிச்சியை அடுத்த நஞ்சை ஊத்துக்குளி ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேக விழா ஜூன் 11-ஆம் தேதி இரவு 11 மணிக்கு கிராம சாந்தியுடன் தொடங்கியது.
12-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி பூஜையும், காலை 9 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் கொண்டு வருதலும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் அங்குர பூஜை, கலாகர்ஷனத்துடன் முதல்கால பூஜை தொடங்கியது.
13-ஆம் தேதி காலை வேதபாராயணத்துடன் இரண்டாம் கால பூஜை தொடங்கியது. மாலை 5 மணிக்கு தனபூஜை, தத்வஹோமத்துடன் 3-ஆம் கால பூஜை தொடங்கியது. இரவு கோபுரக் கலசம் வைத்தல், மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, 14-ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கு நாடிசந்தனம், அஸ்திரஹோமத்துடன் நான்காம் கால யாக பூஜை, மஹாபூர்ணாஹுதி தீபாராதனை, கடம் புறப்பாடு ஆகியன
நடைபெற்றன. தொடர்ந்து, புனிதநீர் யாக சாலையில் இருந்து சிவாச்சாரியார்களால் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு காலை 9 மணி அளவில் ஸ்ரீ விநாயகர்,  ஸ்ரீ மகாமாரியம்மன்,  பரிவாரமூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை ஸ்ரீ மது ஆதிசைவ புரந்திர பண்டித சுவாமிகள் தலைமையில், பழனிசாமி சிவாச்சாரியார், ரத்தினசபாபதி சிவாச்சாரியார், சரவண மாணிக்க சிவாச்சாரியார் ஆகியோர் நடத்தினர்.விழாவுக்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தாக்கள் மாணிக்கசுந்தரம், குப்புசாமி, முத்துசாமி, பரமசிவம், வண்ணக்கன் குலத்தவர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

அலையாடும் பொழுதிலே... ஐஸ்வர்யா தத்தா!

தங்கமே.. சம்யுக்தா ஷான்!

மலரில் மலர்ந்த கனவு... அய்ரா கிருஷ்ணா!

SCROLL FOR NEXT