நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பவானியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பவானியில் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மா.கி.சீதாலட்சுமி தலைமை வகித்தார். பவானி ஒன்றிய நிர்வாகிகள் நா.கோமதி, பி.கேதரின், வகிதா, த.சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தி திணிப்பைக் கைவிட வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.