ஈரோடு

போர்வெல் லாரி உதிரி பாகங்களை திருடியதாக இருவர் கைது

பெருந்துறை அருகே, போர்வெல் லாரி உதிரி பாகங்களைத் திருடியதாக இருவரை காஞ்சிக்கோவில் போலீஸார் கைது செய்தனர்.

DIN

பெருந்துறை அருகே, போர்வெல் லாரி உதிரி பாகங்களைத் திருடியதாக இருவரை காஞ்சிக்கோவில் போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிக்கோவிலைச் சேர்ந்த ரிக் லாரி உரிமையாளர் ஸ்ரீதர் (30). இவர், தனது வீட்டில் இருந்த 149 போர்வெல் டிரில்லிங் உதிரிபாகங்கள் திருடு போனதாக காஞ்சிக்கோவில் போலீஸில் ஏப்ரல் 12-ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.
இதேபோல், திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர், அரியப்பம்பாளையத்தைச் சேர்ந்த ரிக் லாரி உரிமையாளர் ராமமூர்த்தி (43), தனது வீட்டில் இருந்த, 60 டிரில்லிங் உதிரிபாகங்கள் திருடு போனதாக பெருமாநல்லூர் போலீஸில் புகார் செய்தார்.
பல்லடம், குடிமங்கலம், பங்களாபுதூர், பல்ல கவுண்டன்பாளையம் ஆகிய பகுதிகளிலும், போர்வெல் லாரி உதிரிபாகங்கள் திருடப்பட்டதாக போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக இருவரை காஞ்சிக்கோவில் போலீஸார்
செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், சேலம் மாவட்டம், பூசாரிப்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் (29), சர்க்கார் நாட்டாமங்கலத்தை சேர்ந்த கார்த்திக் (30) என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து, போலி பதிவெண் ஒட்டப்பட்ட 2 ஜீப்புகள், ரூ. 8 லட்சம்  மதிப்புள்ள 266 டிரில்லிங் பிட்டுகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

நிலவோடு பிறந்தவளா... மெஹ்ரீன் பிர்சாடா!

பதவி ராஜிநாமாவிற்கு பிறகு முதல்முறையாக ராஜஸ்தான் செல்லும் தன்கர்

95% சேவை மீட்டெடுப்பு: இண்டிகோ அறிவிப்பு!

SCROLL FOR NEXT