ஆசனூர் சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம், ஆசனூர் பகுதியில் புதன்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. தொடர்ந்து வீசிய காற்றில் காரப்பள்ளம் என்ற இடத்தில் மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால், சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து, ஆசனூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மரம் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீரடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.