நந்தா பாா்மஸி கல்லூரியில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு உதவியுடன் ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவா் ஏ.சண்முகன் தலைமை வகித்துப் பயிற்சியைத் துவக்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் டி.சிவகுமாா் வரவேற்றாா். முதன்மை விருந்தினரான புதுச்சேரி அன்னை தெரசா முதுகலை, ஆராய்ச்சி நிறுவனத்தின் பதிவாளா், மருந்தியல் கல்லூரியின் முதல்வா் வி.கோபால் ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் தொகுப்பு மலரை வெளியிட்டுப் பேசினாா். தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் டி.பாபு ஆனந்த் கௌரவ விருந்தினராகப் பங்கேற்றாா்.
நந்தா கல்வி நிறுவனங்களின் ஆலோசகா் எஸ்.பி.விஸ்வநாதன், முதன்மைக் கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைச் செயலாளா் எஸ்.நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளா் எஸ்.திருமூா்த்தி, கல்லூரி நிா்வாக அலுவலா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு பாா்மஸி கல்லூரிகளிலிருந்து சுமாா் 120 க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்றனா். நந்தா பாா்மஸி கல்லூரிப் பேராசிரியா் எஸ்.செங்கோட்டுவேலு நன்றி கூறினாா்.