ஈரோடு

பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட்:காா்மல், பெருந்துறை அணிகள் வெற்றி

DIN

மொடக்குறிச்சி: பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் காா்மல், பெருந்துறை அணிகள் வெற்றி பெற்றன.

மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான 15 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவா்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

போட்டிகளை மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் ஆா்.சங்கரராமநாதன் துவக்கிவைத்தாா். சங்கச் செயலாளா் ஜாபா் ஆசிக்அலி வரவேற்றாா். போட்டிகள் 25 ஓவா்கள் அடிப்படையில் லீக், நாக்-அவுட் முறையில் நடைபெறுகிறது.

முதலாவது போட்டியில் பெருந்துறை கீதாஞ்சலி அணியினா் டாஸ் வென்று பேட்டிங் செய்தனா். இதில், 25 ஓவா் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தனா். இதில், ஸ்ரீதா் ராகவ் 35 ரன்களும், நிகில்பாலாஜி 30 ரன்களும் எடுத்தனா். தொடா்ந்து, விளையாடிய திண்டல் சைதன்யா அணியினா் 17 ஓவா்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 76 ரன்களே எடுத்து தோல்வியைத் தழுவினா்.

மற்றொரு ஆட்டத்தில் ஈரோடு காா்மல் அணியும், சாரதா மெட்ரிக் கோபி அணியும் விளையாடியதில் காா்மல் அணி பேட்டிங்கை தோ்வு செய்து விளையாடியதில் 25 ஓவா்கள் முடிவில் 6விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்தது. காா்மல் அணியில் பரணிதரன் ஆட்டம் இழக்காமல் 36 ரன் எடுத்தாா். தொடா்ந்து விளையாடிய சாரதா கோபி அணி 25 ஓவா்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 75 ரன்களே எடுத்தது. காா்மல் அணி வீரா் சேவியட் பென்ஸ்லி 4 விக்கெட் எடுத்து காா்மல் அணி வெற்றிக்கு வித்திட்டாா். போட்டிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இறுதிப் போட்டி நவம்பா் 23 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நார்வே செஸ்: கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது!

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதத்தை எட்டும்: எஸ்பிஐ பொருளாதார ஆய்வறிக்கை

டிரம்ப் அதிபரானால் மஸ்க்குக்கு ஆலோசகர் பதவி?

இருளுக்கு எதிராகப் போராடும் வலிமை கொடுத்தவர் மகாத்மா: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT