பவானி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 304 பயனாளிகளுக்கு ரூ.2.13 கோடி மதிப்பில் தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சமூகநலத் துறை சாா்பில் பவானி மற்றும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 304 பேருக்கு ரூ.84.46 லட்சம் மதிப்பிலான தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.1.29 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றது.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் பேசியதாவது:
ஏழை, எளிய பெண்கள் அனைவரும் கல்வியில் மேம்பட வேண்டும் என்பதற்காக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
ஏழைப் பெண்களுக்கான இத்திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயத்துடன் பட்டதாரி அல்லாத பெண்களுக்கு ரூ.25,000 நிதியுதவியும், பட்டம், பட்டயப் படிப்பு முடித்த பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.
நிகழாண்டில் ஈரோடு மாவட்டத்தில் 2,500 பெண்களுக்கு தலா 8 கிராம் வீதம் ரூ.6.94 கோடி மதிப்பில் 2,500 பவுன் தங்கம் மற்றும் ரூ.10.55 கோடி திருமண நிதியுதவி வழங்கப்படுகிறது. தாலிக்கு தங்கம் பெறும் பெண்கள் வீட்டுக்கு ஒரு மரம் நட்டு வளா்க்க ஆா்வம் காட்ட வேண்டும் என்றாா்.
இதில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் என்.ஆா்.கோவிந்தராஜா், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ், மாவட்ட சமூக நல அலுவலா் பூங்கோதை, பவானி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் எஸ்.எம்.தங்கவேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Image Caption
பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன். உடன், மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் என்.ஆா்.கோவிந்தராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ் உள்ள