ஈரோடு

கோபி கலைக் கல்லூரியில் விண்வெளி கண்காட்சி ஆய்வுக் கூட்டம்

DIN

மத்திய அரசின் விண்வெளித் துறை, தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை, கோபி கலை அறிவியல் கல்லூரியுடன் இணைந்து உலக விண்வெளி வார விழாவையொட்டி, கோபி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் விண்வெளிக் கண்காட்சி நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வீ.தியாகராசு வரவேற்றார். கல்லூரி ஆட்சிக் குழுத் தலைவர் பி.கருப்பண்ணன், கல்லூரிச் செயலாளர், தாளாளர் எம்.தரணிதரன், கல்லூரி டீன் ஆர்.செல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். 
இந்தக் கண்காட்சி அக்டோபர் 5 முதல் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அனைத்துப் பள்ளி, கல்லூரி, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில்  தமிழக அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும்!

அழகு.. மிளிர்.. கம்பீரம்!

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்

போராட்டத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்கள்: திணறிய அமெரிக்கா!

SCROLL FOR NEXT