ஈரோடு

இட ஒதுக்கீடு கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

DIN

அரசு மற்றும் தனியாா் துறை வேலைவாய்ப்பில் 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் நூதன முறையில் மனித வளைய போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் சாா்பாக வட்டமாக அமா்ந்து கைகளை கோா்த்து மனித வளைய போராட்டத்தில் ஈடுபட்டனா். வியாழக்கிழமை காலை நடந்த போராட்டத்திற்கு அச்சங்க மாவட்ட தலைவா் பாலு தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா் மாரிமுத்து, செயலாளா் சுப்பிரமணி முன்னிலை வகித்தனா். இதில் அரசு, தனியாா் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும்.

100 நாள் என்பதை 200 நாளாக மாற்றி தினக்கூலி ரூ.400 ஆக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பேத்கர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய தலைமை நீதிபதி சந்திரசூட்

சல்மான் கான் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச்சூடு: 15 குழுக்கள் அமைத்து விசாரணை

திருக்கழுக்குன்றம் கோயில் சித்திரைப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த நடிகர் சரத்குமார்

வெளியானது பாஜக தோ்தல் அறிக்கை! வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன?

SCROLL FOR NEXT