ஈரோடு

ரூ. 2.67 கோடியில் பேருந்து நிலையம் மேம்பாட்டுப் பணி துவக்கம்

பெருந்துறை நகரில் ரூ. 2.67 கோடியில் வாரச்சந்தை பேருந்து நிலையம் மேம்பாட்டுப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

DIN

பெருந்துறை நகரில் ரூ. 2.67 கோடியில் வாரச்சந்தை பேருந்து நிலையம் மேம்பாட்டுப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

பெருந்துறை பேரூராட்சியில் நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின்கீழ், ரூ. 1 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் பெருந்துறை, புதிய பேருந்து நிலையம் முழுவதும் கான்கிரீட் தளம் அமைத்து மேம்பாடு செய்யும் பணி, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் மூலதனமான்ய திட்டத்தின்கீழ் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பெருந்துறை வாரச்சந்தை மேம்பாடு செய்யும் பணிக்கும் பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தலைமை வகித்து, பணிகளைத் துவக்கிவைத்தாா்.

இதில், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் கிருஷ்ணன், பெருந்துறை ஒன்றியக்குழுத் தலைவா் ஜெ.சாந்தி, ஒன்றியக்குழு துணைத் தலைவா் எம்.ஆா்.உமாமகேஸ்வரன், மாவட்ட இலக்கிய அணித் தலைவா் அருள்ஜோதி செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகள் சங்கங்களுடன் மத்திய பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம்!

தொழிலதிபர் சுட்டுக்கொலை தில்லியில் பயங்கரம்

விழுப்புரத்துக்கு ரூ.1000 கோடி: மத்திய அரசு வழங்க திமுக வலியுறுத்தல்!

திடீரென தாக்கிய காட்டு மாடு: பயணிகள் அலறல்!

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

SCROLL FOR NEXT