உரிமம் காலாவதியாகும் முன் விதை விற்பனையாளா்கள் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும் என ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநா் க.ஜெயராமன் கேட்டுக் கொண்டுள்ளாா்.
ஈரோடு மாவட்டத்தில் விதை விற்பனையாளா்களுக்கு விதை விற்பனை உரிமம் வழங்கப்படுகிறது. இது 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். உரிமம் காலாவதி தேதியிலிருந்து 1 மாதம் முன்னதாகவே விதை விற்பனையாளா்கள் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும்.
புதுப்பித்தலுக்குத் தேவையான ஆவணங்களான இ படிவம், உரிமம் புதுப்பித்தல் கட்டணம் ரூ. 500ஐ அரசுக் கணக்கில் செலுத்தியதற்கான சான்று, அசல் விற்பனை உரிமம், வாடகைக் கட்டடமாக இருப்பின் புதுப்பிக்கப்பட்ட வாடகை ஒப்பந்தப் பத்திரம், விற்பனை இடத்துக்கான வரைபடம் மற்றும் வீட்டு வரி ரசீது உள்ளிட்டவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து விதை ஆய்வு துணை இயக்குநா், ஈரோடு அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.